உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவையில் 20 ஆயிரம் நாட்டு மர விதைகள் வழங்கப்பட்டது !
கோவை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவை அரசு கலைக் கல்லூரி சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை துறை சார்பில் “சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 20 ஆயிரம் நாட்டு மர விதை பாக்கெட்டுகள் மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கலெக்டர் பவன்குமார், “தமிழ்நாட்டிலேயே மட்டுமின்றி இந்தியாவிலும் அழகான இயற்கைச் சூழலுடன் விளங்கும் மாவட்டம் கோவை. மருத்துவம், கல்வி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்குப் பொருத்தமான மாவட்டமாக உள்ளது. இங்கு வழங்கப்பட்ட மரவிதைகளை அனைவரும் கொண்டு சென்று நட்டு பராமரிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.