பூலாம்பட்டி காவிரி ஆற்றில் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவேரி ஆற்றில் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் விசைப்படகுகளில் மூலம் நடு ஆற்றிற்க்கு கொண்டு சென்று கரைத்து வழிபட்டனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பாட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சதுர்த்தியான நேற்றிலிருந்து இன்று வரை சுமார் 200 மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் பூலாம்பட்டி காவேரி ஆற்றுக்கு கொண்டுவந்து சிறப்பு பூஜைகள் செய்த அங்குள்ள விசை படகுகளில் விநாயகர் சிலைகளை ஏற்றிச்சென்று நடு ஆற்றின் தண்ணீரில் கரைத்தனர். பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் பூலாம்பட்டி போலீசார் மற்றும் எடப்பாடி தீயணைப்புத் துறை வீரர்கள் பேரிகார்டு வைத்து ஒரு விநாயகர் சிலையைக் கரைப்பதற்கு நான்கு பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் காவேரி கரையோர பகுதிகளில் அதிக அளவில் பக்தர்கள் விநாயகர் சிலைகளை கரைக்க வந்ததால் அப்பகுதிகளில் விழா கோலமாக காட்சியளித்து வருகிறது.