மாற்றுக் கட்சிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்...

மாற்றுக் கட்சிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்...;

Update: 2024-12-10 12:50 GMT
உதகையில் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சார நடனமாடி உற்சாகத்துடன் தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட தோடர் இன பழங்குடியினர்.... மாற்றுக் கட்சிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்டோர் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்... தமிழக வெற்றி கழகத்தின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம் உதகையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ரமேஷ், தலைமையில், உதகை, கூடலூர், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர். அதேபோல் நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான தோடர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டோர் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சார நடனமாடி தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெகவினர் சிறப்பாக செயல்பட்டு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று உறுப்பினர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பழங்குடியின அணி தலைவர் தினேஷ், செயலாளர் ஷாம் உட்பட மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேட்டி - ரமேஷ் நீலகிரி மாவட்ட தலைவர், பேட்டி - டேனி மாவட்ட ஆலோசகர்.

Similar News