ஏஜி சர்ச் நாற்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நகரின் முக்கிய வீதி வழியாக 200க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று சிறப்பு பிரார்த்தனை
சிறப்பு பிரார்த்தனை;
தேனி மாவட்டம் போடி பார்க் பகுதியில் ஜெயம் கார் பார்க்கிங் அருகாமையில் ஏஜி சர்ச் உள்ளது. இந்த சர்ச் துவங்கப்பட்டு 40 ஆம் ஆண்டு விழா 3 நாட்கள் நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்ச்சியாக போடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். ஊர்வலத்தின் முடிவில் பெண்கள் இளைஞர்கள் ட்ரம்செட்டுக்கு நடனமாடி கொண்டாடினர். பின்னர் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.