திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 2006-ம் ஆண்டு பட்டா வழங்கியும் இதுவரை வீட்டுமனை அளவீடு செய்து தராமல் ஏமாற்றுவதை கண்டித்து பட்டை நாமம் போட்டு விடுதலை சிறுத்தைக கட்சி!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 2006-ம் ஆண்டு பட்டா வழங்கியும் இதுவரை வீட்டுமனை அளவீடு செய்து தராமல் ஏமாற்றுவதை கண்டித்து பட்டை நாமம் போட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-09-02 12:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
2006 ஆம் ஆண்டு பட்டா வழங்கியும்  இதுவரை வீட்டு மனை அளவீடு செய்து தராமல்  ஏமாற்றுவதை கண்டித்து பட்டை நாமம் போட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த காளிபாளையம் கிராம பட்டியல் இன மக்களுக்கு 2006 ஆம் ஆண்டு நத்தம் புறம்போக்கு பகுதியில் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வீட்டு மனைகளை அளவீடு செய்து தராமல் தங்களை ஏமாற்றி வருவதாகவும் பலமுறை மனு அளித்தும் வீட்டுமனைகளை தராமல் அரசு ஏமாற்றி வருவதாகவும் வீட்டு மனை பட்டா இங்கே எங்களுக்கு வழங்கப்பட்ட நிலம் எங்கே என கேட்டு தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்த்தும் விதமாக பட்டை நாமம் அணிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News