மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வு-2025 (SLAS) ஆய்வுக்கூட்டம்
திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வு-2025 (SLAS) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது;
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திண்டுக்கல் முத்தனம்பட்டி பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத்திறன் தேர்வு-2025 (SLAS) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பேசியதாவது:- இந்நிகழ்ச்சியில், 2023-24 கல்வியாண்டிற்கான காமராசர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 மாணவர்களுக்கு தலா ரூ.10,000/-க்கான காசோலை மற்றும் சான்றிதழும், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 15 மாணவர்களுக்கு தலா ரூ.20,000/-க்கான காசோலை மற்றும் சான்றிதழும், விபத்தில் பெற்றோர்களை இழந்த 51 மாணவர்களுக்கு தலா ரூ.75,000 வைப்பீடு தொகைக்கான பத்திரங்களையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.