எதிர்கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,ஐ 2026 தேர்தலில் முதல்வராக்க தீவிர பணியாற்ற வேண்டும் என பூத் ஏஜெண்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுரை வழங்கினார்.
எதிர்கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,ஐ 2026 தேர்தலில் முதல்வராக்க தீவிர பணியாற்ற வேண்டும் என பூத் ஏஜெண்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுரை வழங்கினார்.;
எடப்பாடி யார் அவர்களை முதல்வராக்க தீவிர பணியாற்ற அறிவுரை எதிர்கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,ஐ 2026 தேர்தலில் முதல்வராக்க தீவிர பணியாற்ற வேண்டும் என பூத் ஏஜெண்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி அறிவுரை வழங்கினார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத்தில் உள்ள அ.தி.மு.க., கட்சியை சேர்ந்த பி.எல்.ஏ.,2 என்கிற பூத் ஏஜெண்டுகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ராசிபுரம் நகர கழக செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதில், முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, வெ.சரேஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். அப்போது தங்கமணி பேசியதாவது: தற்போதைய எதிர்கட்சி தலைவராக இருக்கும் நமது பொதுச்செயலாளர் எடப்பாடியார்., 2026 தேர்தலில் முதல்வராக்க வேண்டும். அதற்கான முக்கிய பணி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர் தீவிர திருத்த முகாம் தி.மு.கவிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், தகுதியான வாக்காளர்களின் பெயரை நீக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது 2 விண்ணப்பங்களை கொடுப்பார்கள். விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து பூர்த்தி செய்து பார்த்து பிறகு ஒரிஜினலில் பூர்த்தி செய்ய வேண்டும். இதை நாம் செய்தாலே, 50 சதவீதம் தேர்தல் பணி முடிந்து விடும். வெளியூரில் வசிப்பவர்கள், அடையாளமே தெரியாமல் வெளியூரில் இருப்பவர்கள் பெயர்களை நீக்க வேண்டும். எனவே பூத் ஏஜெண்டுகள் மிகவும் ஜாக்கிரதையாக பணியாற்ற வேண்டும் என்றார். 2026 ம் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அவர்களை முதல்வராக கொண்டுவர வேண்டுமென மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அதே வேளையில் நம் கட்சி பணிகளை சிறப்பாக செய்து நீங்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும், மக்களிடத்தில் திமுகவின் மக்கள் விரோத இந்த ஆட்சியை எடுத்து கூற வேண்டும், தினந்தோறும் பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர் இந்த நிலைமை மாறவேண்டும் என்றால் அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே அனைவருக்கும் சிறப்பான எதிர்காலம் அமையும் எனவே இதற்கு உண்டான முயற்சியை எடுத்து அனைவரும் இந்த பணியை சிறப்பாக செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் வழங்கும் விண்ணப்ப படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ பிரபு, அவைத்தலைவர் கந்தசாமி, வழக்கறிஞர்கள் சுரேஷ், ஆர்.கே.டி.தங்கதுரை, பூபதி, ராதா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு முரளி பாலுசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் வேம்பு சேகரன், தாமோதரன், சரவணன், ராஜா, மற்றும் பேரூர் கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், என கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.