ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் 2026 புதியதாக பெயர் சேர்த்தல், திருத்தம் (ம) நீக்கம் செய்ய இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம்.

முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா கேட்டுக் கொண்டுள்ளார்.;

Update: 2026-01-02 12:29 GMT
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் 2026 புதியதாக பெயர் சேர்த்தல், திருத்தம் (ம) நீக்கம் செய்ய இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம். இராணிப்பேட்டை மாவட்டத்தில் 01.01.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் 2026) தொடர்பாக, இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து 1247 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் நாளை சனிக்கிழமை (03.1.2026) மற்றும் (04.01.2026) ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஆகவே, 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடையும் இளைஞர்கள் மற்றும் இதுவரை விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளவும், தங்களது வாக்காளர் விவரங்களைச் சரிபார்த்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் தங்கள் பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மேற்கண்ட 2 நாட்களுக்கு சென்று இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News