விவசாயி,விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி டிசம்பர் 21 இல் மாநாடு.- தமிழ்நாடு உழவர் பேரியக்க செயலாளர் இல.வேலுச்சாமி கரூரில் பேட்டி.

விவசாயி,விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி டிசம்பர் 21 இல் மாநாடு.- தமிழ்நாடு உழவர் பேரியக்க செயலாளர் இல.வேலுச்சாமி கரூரில் பேட்டி.

Update: 2024-12-01 10:33 GMT
விவசாயி,விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி டிசம்பர் 21 இல் மாநாடு.- தமிழ்நாடு உழவர் பேரியக்க செயலாளர் இல.வேலுச்சாமி கரூரில் பேட்டி. கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு உழவர் பேர இயக்க செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி கூட்டத்தில் நிறைவில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு உழவர் பேர் இயக்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி மாநாடு நடத்த உள்ளது. அது தொடர்பாக இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாநாட்டின் நோக்கம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை முன்னிறுத்தி மாநாடு நடைபெறும் எனவும், இந்த மாநாட்டில் கரூர் மாவட்டம் சார்பில் பத்தாயிரம் பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு விவசாயிகளை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகள் பணியின் போது அகால மரணம் ஏற்பட்டால்,அவர்கள் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாநிலத்தில் உள்ள நீர் ஆதார பிரச்சனைகள், விவசாயிகளை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள், பன்னாட்டு நிறுவனங்களுக்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் செயல்பாட்டினை தடுப்பது போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி இந்த மாநாடு நடைபெறும் என தெரிவித்தார்.

Similar News