டிரினிடி மகளிர் கல்லூரியில் சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி

Update: 2024-12-19 09:18 GMT

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ் துறையின் சார்பில் "ஆரோக்கியமான வாழ்விற்கு சிறுதானிய உணவுகள்" என்ற தலைப்பிலான விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி நிகழ்வு இன்று (19/12/24) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களை கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன் அறிமுகப்படுத்தினார். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புச் துறை நியமன அலுவலர் மரு. கே. சி. அருண் கலந்து கொண்டார். சிறு தானியங்களான கம்பு, ராகி, சோளம், திணை, சாமை, குதிரைவாலி போன்றவற்றினை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்திக்கு இவை பெரும் பயனை அளிக்கும் என்றார்.

மற்றொரு சிறப்பு அழைப்பாளர் சேலம் - சிஜே பிளாசியோ நட்சத்திர விடுதியின் முதன்மை சமையல் கலை நிபுணர் ஆன்ட்ரு கே. நாகராஜன் தன் உரையில் குறிப்பிடுகையில் இன்றைய இளம் வயதினர் சிறுதானிய உணவுகளுக்கு பதில் துரித உணவுடிரினிடி மகளிர் கல்லூரியில் சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காட்சிகளுக்கே மிகவும் முன்னுரிமை தருகிறார்கள். குறிப்பாக 5 சதவீதம் மட்டுமே சிறுதானிய உணவுகளை உட்கொள்கிறார்கள். வாரத்திற்கு குறைந்தது இரண்டு நாட்களாவது சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டி. முருகன், நியூட்ரிசன் துறை உதவிப் பேராசிரியைகள் ஆர். ரூபா, பி. ஶ்ரீ ரேணுகாதேவி, ஆர். வனிதா உட்பட ஏறத்தாழ 300 மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை நியூட்ரிசன் பாடப்பிரிவு மாணவி டி. மஞ்சு தொகுத்து வழங்கினார். பி. வேதா நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் நடைபெற்ற சிறுதானிய கண்காட்சி நிகழ்வில் ஊட்டச்சத்து, ஆங்கிலம், வணிகவியல் மற்றும் கணினி அறிவியல் துறை மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் தயாரித்த சிறுதானிய உணவுகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

Tags:    

Similar News