ஜீன்-22 யில் மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம்

முருக பக்தர்கள் மாநாட்டில் செல்லும் இந்து முன்னணி, RSS, மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர், தாங்கள் செல்லும் வாகனத்திற்கு, உரிய வாகன அனுமதி சீட்டை, பெரம்பலூர் மற்றும் மங்களமேடு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்கள்.;

Update: 2025-06-18 06:39 GMT
ஜீன்-22 யில் மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 17.06.2025 ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற காவல் துறை ஆலோசனை கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட சார்பில் கலந்து கொள்ளும். இந்து முன்னணி, RSS, மற்றும் பாரதிய ஜனதா கட்சியின், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மாநாட்டிற்கு வாகனத்தில் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சாலை விதிமுறைகள் மற்றும் சில அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும், முருக பக்தர்கள் மாநாட்டில் செல்லும் இந்து முன்னணி, RSS, மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர், தாங்கள் செல்லும் வாகனத்திற்கு, உரிய வாகன அனுமதி சீட்டை, பெரம்பலூர் மற்றும் மங்களமேடு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு செல்ல வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்கள்.

Similar News