கூத்தன்பத்து ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் 23-ம் ஆண்டு திருவிழா

பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம்;

Update: 2025-06-15 08:19 GMT
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் சூரமங்கலம் கூத்தன்பத்து பகுதியில், ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஸ்ரீ காத்தவராயன், ஸ்ரீ கன்னிமார்கள், ஸ்ரீ பெரியநாயகி மற்றும் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இக்கோயிலின், 23 -ம் ஆண்டு திருவிழா கடந்த கடந்த 13-ம் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. மதியம் கஞ்சி வார்த்தலும், இரவு வாண வேடிக்கையுடன், சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, நேற்று முன்தினம் அம்மனுக்கு பல்வேறு வகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு திரையிசை தெம்மாங்கு கானா பாடல் நடனத்துடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News