சிறுமியை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
தீர்ப்பு;
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்ற இளைஞர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதோடு நடந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுது. இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவுற்று ராஜகோபால் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக 2019 ஆம் ஆண்டு குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு திருத்த சட்ட பிரிவு 4(2) கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 10000 ரூபாய் அபராதம், அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 1 வருடம் மெய்க்காவல் சிறை தண்டனை விதித்ததோடு, 2019 குழந்தைகள் பாதுகாப்பு திருத்த சட்டம் 8ன் கீழ் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் வழங்கி வழங்கியதோடு சிறை தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என தனது தீர்ப்பின் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறுமியின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்விற்காக தமிழக அரசு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதில் 50000 ரூபாய் சிறுமியின் பராமரிப்பு செலவிற்காக உடனடியாக வழங்க வேண்டும் மீதமுள்ள 5 லட்சத்து 50000 ரூபாயை சிறுமியின் எதிர்கால வாழ்விற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக வைக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.