பரமத்தி வேலூரில் ரூ.2.31 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்.

பரமத்தி வேலூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.31 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் போனது.;

Update: 2025-05-28 11:57 GMT
பரமத்திவேலூர், மே.28:   பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரத்து 690 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.52.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.30.19-க்கும், சராசரியாக ரூ.48.47-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 82 ஆயிரத்து 20-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 550 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.62.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.43.15-க்கும், சராசரியாக ரூ.58.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 540-க்கும் ஏலம் நடைபெற்றது.

Similar News