கொளத்தூர் ஊராட்சியில் ரூபாய் 23,27,850 மதிப்பீட்டில் தேசிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, கழிவுநீர் வாய்க்கால், பணி துவக்கம்

துப்புரவு பணியாளர்களை முன்னிறுத்தி கௌரவப்படுத்தும் விதமா அவர்களின் கைகளால் மலர் தூவி பணியினை துவக்கி வைத்தார் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான டி. ஆர்.சிவசங்கர்;

Update: 2025-02-26 12:45 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்தூர் ஊராட்சியில் ரூபாய் 23,27,850 மதிப்பீட்டில் தேசிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, கழிவுநீர் வாய்க்கால், அமைக்கும் பணியினை கொளத்தூர் ஊராட்சியை சார்ந்த துப்புரவு பணியாளர்களை முன்னிறுத்தி கௌரவப்படுத்தும் விதமா அவர்களின் கைகளால் மலர் தூவி பணியினை துவக்கி வைத்த போது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும் திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான டி. ஆர்.சிவசங்கர், மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கே.எம்.ஏ.சுந்தர்ராஜ் அவர்கள் கிளைக் கழக செயலாளர்கள் துரைமாணிக்கம், சி.பி ராஜேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகம், ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் பாலமுருகன், முன்னாள் ஒன்றிய குழு சேர்மன் வெண்ணிலா ராஜேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உட்பட பொதுமக்கள் ஊராட்சி அலுவலர் பிரபு,கிராம அலுவலர் முருகானந்தம்,கமல் உள்ளிட்ட ஊராட்சி அலுவலர்கள் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக பங்கேற்றனர்.

Similar News