ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு : ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைப்பு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கு ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.;

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கு ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தனபால் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் உத்தரவு ஏதும் பிறப்பிக்கபடவில்லை. மேலும் இந்த வழக்கில் மனுதாரருடன் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள INTUC சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இம்மனு அடுத்த மாதம் 24ஆம் தேதி அன்று உத்தரவு பிறப்பிப்பதற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.