ஜெயங்கொண்டத்தில் ஜமாபந்தி 24 மனுக்கள் உடனடி தீர்வு டிஆர்ஓ பட்டா வழங்கினார்
ஜெயங்கொண்டத்தில் ஜமாபந்தி 24 மனுகளுக்கு ஒரு அடி தீர்வு கண்டதுடன் பொதுமக்களுக்கு டிஆர்ஓ பட்டா வழங்கினார்;
அரியலூர். மே.20- அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்திற்கான 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்ப்பாயம் ஜமாபந்தி நேற்று துவங்கியது. உடையார்பாளையம் வட்டம் தா.பழூர் உள் வட்டத்தில் உள்ள இருகையூர் காரைக்குறிச்சி வாழைக்குறிச்சி தென்கச்சி பெருமாள் நத்தம் தா.பழூர், கோடங்குடி நாயகனை பிரியாள், இடங்கண்ணி, உதயநத்தம், அனைக்குடம் பொற்பதிந்த நல்லூர் சோழமாதேவி, கோடாலி கருப்பூர், வேம்பு குடி ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் தாசில்தார் சம்பத்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் சிவநேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா, உதவித்தொகை, சிட்டா நகல், உட்பிரிவு அளந்து அத்து காட்டல், குடும்ப அட்டை மற்றும் சான்றுகள் கேட்டு 266 பேர் மனுக்கள் அளித்திருந்தனர். இவற்றில் 24 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டது. 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 240 மனுக்கள் விசாரணையில் உள்ளன. இன்று 21ஆம் தேதி சுத்தமல்லி உள் வட்டத்தில் உள்ள மணகெதி, உல்லியகுடி வெண்மான் கொண்டான், பருக்கல் கோவிந்த புத்தூர், நடுவலூர் சுத்தமல்லி, கீழ நத்தம், அம்பாபூர், உடையவர் தீயனூர், கடம்பூர், சாத்தம்பாடி, ஸ்ரீபுரந்தான் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி இன்று நடைபெறுகிறது. .