திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம் 24.06.2025 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்

திருநங்கைகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட சிறப்பு முகாம் 24.06.2025 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப.,அவர்கள் தகவல்;

Update: 2025-06-04 13:20 GMT
விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வரும் 24.06.2025 அன்று விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. திருநங்கைகள் நல வாரிய அட்டை வழங்குதல் ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுதல் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்குதல் ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்குதல் வாக்காளர் அட்டை வழங்குதல் குடும்ப அட்டை வழங்குதல் ** சுயதொழில் தொடங்க மானியம் தொகை/ பயிற்சி வழங்குதல் இலவச தையல் இயந்திரம் வழங்குதல் கல்வி உதவித் தொகை வழங்குதல் 40-வயதிற்கு மேல் உள்ள திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல் மேற்கண்ட நாளில் நடைபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்

Similar News