கோவை: ஓராண்டில் 25 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை !
கோவை அரசு மருத்துவமனையில், கடந்த ஓராண்டில் மட்டும் 25 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.;
கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறையின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா இன்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறை, தொடர் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு விதமான சிகிச்சைகளை வழங்கி வருகிறது. மாதந்தோறும் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் 1,800-க்கும் மேற்பட்ட புறநோயாளிகளும், 250-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிறுநீரகவியல் துறையில் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் 25 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பராமரிக்க, தினமும் எட்டு கப் தண்ணீர் அருந்த வேண்டும். உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவில் அதிக காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறையின் சிறப்பான சிகிச்சை முறைகள் மற்றும் சுகாதாரமான பராமரிப்பு முறைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.