தேனி மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் அசோசியேசன் சார்பில் மாவட்ட அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி ஏப்ரல் 6-ல் நடைபெற்றது. போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர்களுக்கு என பல்வேறு எடை பிரிவுகளில் 120 பேர் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 25 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் மே.9, 10, 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.