குடும்பத் தலைவிகளுக்கு 2500 ரூபாய் வழங்க எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசி இருப்பதாக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேச்சு

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று குடும்பத் தலைவிக்கு 2500 ரூபாய் வழங்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன் பேசி இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசினார்

Update: 2024-07-23 14:40 GMT
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று குடும்பத் தலைவிக்கு 2500 ரூபாய் வழங்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன் பேசி இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசினார் விருதுநகர் சேதபந்து மைதானத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்தும் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் துவரம்பருப்பு எண்ணெய் ஆகியவற்றை நிறுத்த முயற்ச்சிக்கும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னால் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பேசுகையில், திமுக அரசு மூன்று முறை மின் கட்ணத்தை உயர்த்தி இருப்பதாகவும் எம்பி தேர்தலில் வெற்றி பெற்ற உடன் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை அறிவித்து இருப்பதாகவும் மின் கட்டணத்தை பார்க்கும் போது ஷாக் அடிக்க வில்லை தூக்கி அடிப்பதாகவும், பேருந்து கட்டணம் உயர்ந்து இருப்பதாகவும், நியாவிலைகடைகளில் அத்தியவசிய பொருள் கிடைப்பதில்லை நியாவிலை கடையில் எந்த பொருள் கேட்டாலும் இல்லை எனக் கூறுகிறார்கள் திமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை செய்ய முடியவில்லை எனவும் தொடர்ந்து ரைடு நடத்தி தொழிலை முடக்குவதற்கு பதிலாக அந்த தொழிலை முழுவதுமாக மூடிவிடலாம் அவர்கள் மாற்றுத் தொழிலுக்காக செல்வார்கள் மேலும் பேசிய அவர் விலை வாசி அனைத்தும்உயர்ந்து உள்ளது சொந்து வரி தண்ணீர் வரி குப்பை வரி அனைத்தும் உயர்ந்து உள்ளது வாக்கு அளித்த மக்கள் அனைவரும் கதறுவதாகவும் 40 தொகுதியில் வெற்றி பெற்ற காரணத்தால் 200 சட்ட மன்ற தொகுதி யில் வெற்றி பெறுவோம் என திமுகவினர் கூறுகின்றனர் யாரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க போவதில்லை நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் மோடி வர வேண்டுமா ராகுல் காந்தி வர வேண்டுமா என நினைத்து தமிழக மக்கள் வாக்களித்தனர் அதிமுகவிற்கு அளிக்கும் வாக்கு டெல்லியில் தீர்மானிக்காது என நினைத்து தமிழக மக்கள் வாக்களித்து இருப்பதாகவும் தமிழக மக்கள் மாதம் 1000 ரூபாய் மனதில் வைத்து வாக்களிப்பதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று குடும்பத் தலைவிக்கு 2500 ரூபாய் வழங்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன் பேசி இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசினார்

Similar News