கரூரில் ஆட்டோ பைனான்ஸில் வேலை பார்த்து ரூ 25,32,000-ஐ ஏமாற்றி கைவரிசை காட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவு.

கரூரில் ஆட்டோ பைனான்ஸில் வேலை பார்த்து ரூ 25,32,000-ஐ ஏமாற்றி கைவரிசை காட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவு.

Update: 2024-11-13 11:53 GMT
கரூரில் ஆட்டோ பைனான்ஸில் வேலை பார்த்து ரூ 25,32,000-ஐ ஏமாற்றி கைவரிசை காட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவு. கரூரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மோகன்ராஜ் வயது 30. இவர் கடந்த 2018 முதல் அலங்கார் எலக்ட்ரிக் அண்ட் கோ என்ற நிறுவனத்தின் இரண்டாவது மாடியில் ராசி ஆட்டோ பைனான்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி, சாந்தி நகரை சேர்ந்த இளங்கோ மகன் நாகராஜ் வயது 25 என்ற பெயிண்டிங் வேலை பார்த்த நபரை, ஆட்டோ பைனான்ஸில் வரவு செலவு பார்க்கும் பணிக்காக 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நியமிக்கப்பட்டார். இந்த நிறுவனத்தில் நாகராஜ் 2021 நவம்பர் 22ஆம் தேதி வரை பணியில் இருந்து உள்ளார். இவரது பணி காலத்தில் போலியான கணக்குகளை துவக்கி, ஏமாற்றும் நோக்கத்தோடு நாகராஜன் அவரது ஜி பே நம்பர் ஆன 96292 49080 ஆட்டோ பைனான்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மாத தவணை செலுத்த கொடுத்துள்ளார். வாடிக்கையாளர்களும் அந்த ஜி.பே நம்பரில் பணத்தை செலுத்தி உள்ளனர். இதனிடையே நாகராஜ் வேலையை விட்டு நின்று விட்டார். தொடர்ந்து நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த மோகன்ராஜ் நிறுவனத்தின் பணத்தை ஏமாற்றியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, மொத்தம் 25 லட்சத்தி 32 ஆயிரம் ரூபாய் ஆட்டோ பைனான்ஸ்க்கு சொந்தமான பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே இது குறித்து மோகன்ராஜ், கரூர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக பொய்யான கணக்குகளை துவக்கி பணத்தை மோசடி செய்த நாகராஜ் மீது வழக்கு நேற்று பதிவு செய்துள்ளனர்.

Similar News