ஜோலார்பேட்டை அருகே கூலி தொழிலாளி 26லட்சம் ஜிஸ்டி வரி செலுத்த நோட்டீஸ்

ஜோலார்பேட்டை அருகே கூலி தொழிலாளியிற்கு 26 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு..

Update: 2024-10-28 08:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கூலி தொழிலாளியிற்கு 26 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு.. உரிய நடவடிக்கை எடுக்ககோரி கூலி தொழிலாளி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடரும் ஜி.எஸ்.டி வரிஏய்ப்பு சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பெரியகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அப்சர் இவர், கூலி தொழில் செய்து வரும் நிலையில், அப்சருக்கு சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலகத்திலிருந்து, அப்சர் ட்ரோடர்ஸ் நடத்தி 26 லட்சம் ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் அப்சர் அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற சிறப்பு மனுநீதி முகாமில் மனு அளித்துள்ளார்.. மேலும் கூலி வேலை செய்யும் தனக்கு 26 லட்சம் கட்ட வேண்டி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ய கடிதத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்சர் கோரிக்கை விடுத்துள்ளார்..

Similar News