திருச்செந்தூர் கோவிலில் ரூ.26.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள்
திருச்செந்தூர் கோவிலில் ரூ.26.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்;
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.26.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவ ஆனந்தி மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.