ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிபோதையில் 27 வயது இளைஞர் அடித்துக் கொலை., ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை..*
ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிபோதையில் 27 வயது இளைஞர் அடித்துக் கொலை., ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை..*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிபோதையில் 27 வயது இளைஞர் அடித்துக் கொலை., ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கூரணி குளம் அருகே டாஸ்மாக் கடை அதனுடன் பார் இயங்கி வருகிறது. இந்த கடையில் சிவகாசி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த கூலிதொழிலாளியான மாயன் 27 வயது இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு பார் நடத்தி வரும் பரமன் என்பவரிடம் பாரின் வெளிப்புறத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பரமன் மூவரில் ஒருவரை அடித்து துரத்திய நிலையில் பின்னர் மூன்று பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.இதில் இருவர் வேகமாக முன்னால் நடந்து சென்ற போது சிறிது நேரம் கழித்து மாயன் பின்னால் மெதுவாக நடந்து சென்றுள்ளார்.இதை குடிபோதையில் பார்த்துக் கொண்டிருந்த பரமனுக்கு நன்கு தெரிந்த நபர்களான மான்சிங்ராஜா,அருள் அசோக்,போஸ்,சிவா ஆகிய நான்கு பேரும் மாயனை டாஸ்மார்க் கடை பின்புறம் தூக்கிச் சென்று சரமாரியாக அடித்து உள்ளனர். இதில் மயக்கமடைந்த நிலைக்குச் சென்ற மாயனை தூக்கி வந்து சங்கூரணி குளம் அருகே போட்டு விட்டு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து நகர் காவல் துறையினருக்கு சங்கூரணி அருகே இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். குடிபோதையில் இளைஞர் இறந்தாரா? வேறு ஏதும் காரணமா என விசாரணை மேற்கொண்ட போது இறந்த இளைஞரின் உடலில் அடித்த காயங்கள் இருந்துள்ளது. பின்னர் அரசு மதுபானக் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நான்கு பேர் மாயனை தூக்கி சென்று அடித்ததும் இறந்த பின்னர் உடலை தூக்கி வந்து சங்கூரணி குளம் அருகே போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பார் நடத்தி வரும் பரமன் மற்றும் மான்சிங்ராஜா, அருள் அசோக்,போஸ், சிவா ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்துக் கொன்ற சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில் தினந்தோறும் கொலைகள், திருட்டு சம்பவங்கள், பாலியல் குற்றங்கள் நடந்து வரும் சம்பவம் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.