பெரம்பலூர் முதல் உடும்பியம் வரை ரூ.28.82 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள சாலை ஆய்வு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம், மத்திய நிதிக்குழு மானியம், தேசிய ஊரக வாழ்வாதார;

Update: 2025-09-22 17:36 GMT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் கண்காணிப்புக்குழுவின் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.அருண்நேரு தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி முன்னிலையில் இன்று (22.09.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்பிதனர். இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சித் திட்டம், மத்திய நிதிக்குழு மானியம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டம், தேசிய சுகாதார பணி , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், மதிய உணவுத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், இத்திட்டத்தின் மூலம் என்னென்ன பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது, எத்தனை பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்பது குறித்தும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தார். மேலும், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைதுறை, பள்ளிக்கல்வித்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா, பயன் பெற்ற பயனாளிகளின் விபரங்கள், எவ்வாறு பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றார்கள் என்பது குறித்தும், ஒவ்வொரு திட்டத்திற்குமான இலக்கீடுகள் முழுமையாக எய்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்தார். முன்னதாக, பெரம்பலூர் முதல் உடும்பியம் வரை ரூ.28.82 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள ஆத்தூர் தேசிய சாலையின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் இன்று (22.09.25) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.தேவநாதன், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், ஆட்மா தலைவர் வீ.ஜெகதீசன், நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் அனைத்து அரசுத் துறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News