கோவையில் 29-வது வார்டின் அவல நிலை – பொதுமக்கள் போராட்டம்!
கோவையில் திட்டமின்மையால் குடிநீர் குழாய் சேதம், மக்கள் சாலை மறியல்.;
கோவை மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் நெருங்குவதால், பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த பணிகள் அவசரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 20, 28, 29-வது வார்டுகளில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், 29-வது வார்டு கட்டபொம்மன் தெருவில் குடிநீர் குழாய் மற்றும் பாலம் அருகே திட்டமின்றி தோண்டியதால், குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. இதனால், கழிவுநீருடன் குடிநீர் கலக்கும் அபாயம் உருவாகி, நோய் பரவும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதுகுறித்து மக்கள் புகார் அளித்தபோது, மேயர் ரெங்கநாயகி, வார்டு உறுப்பினர்கள் கண்ணகி ஜோதிபசு, மரியராஜ் ஆகியோர் எங்களுக்கு தெரியாது என அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பாலம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.