வேலு நாச்சியாரின் 295 வது பிறந்தநாள் விழா
மயிலாடுதுறையில் வேலுநாச்சியாரின் 295-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் மலர்தூவி மரியாதை:- பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்;
. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலுநாச்சியாரின் 295-வது பிறந்தநாள் விழாவை மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாகமாக கொண்டாடினர். இதையொட்டி, மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்ட வேலு நாச்சியாரின் உருவப்படத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு, மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பட்டாசு வெடித்து, பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வணிகர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.