மது பாட்டில் கடத்திய 3 பேர் மீது குண்டாஸ்

காரில் வெளிமாநில மது பாட்டில் கடத்திய 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை

Update: 2024-12-26 05:23 GMT
திண்டுக்கல், நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காரில் வெளி மாநில மதுபான பாட்டில்களை கடத்தி வந்த ரகுபதி(32), முத்துக்குமரன்(30), முருகன்(54) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 900 வெளி மாநில மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த 3 பேரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மதுவிலக்கு எஸ்.பி.சந்திரசேகரன் அறிவுறுத்தலின் பேரில் திண்டுக்கல் S.P. பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி அவர்கள், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா, சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் மற்றும் காவலர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News