திருச்சி மாநகர பகுதிகளில் வருகிற 3 ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
திருச்சி இ.பி. ரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இ.பி. சாலை, மணிமண்டப சாலை, காந்தி சந்தை, கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித்தெரு, பூலோகநாதா் கோவில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் சாலை, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, பட்டா்வொத் சாலை, கீழ ஆண்டாா் வீதி, மலைக்கோட்டை, மேலரண் சாலை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, நகர ரெயில் நிலையம், விஸ்வாஸ் நகா், வேதாத்ரி நகா், ஏ.பி. நகா், லட்சுமிபுரம், உக்கடை ஆகிய பகுதிகளில் வருகிற 3 ந் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.