கஞ்சா விற்ற 3 பேர் கைது

கைது

Update: 2025-01-06 04:10 GMT
குதிரைச்சந்தல் கிராமத்தில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையிலான போலீசார் நேற்று காலை குதிரைச்சந்தல் கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது குதிரைச்சந்தல் அருகே உள்ள சாய்பாபா கோவில் பின்புறம் சந்தேகத்தின் படி நின்றிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்த கச்சிராயபாளையம் போலீசார் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னன் மகன் சாமிக்கண்ணு 47, கல்வராயன் மலையில் உள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் சரவணன் 28, குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த ஐயம்பெருமாள் மகன் மணி 23, ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.

Similar News