கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது: மோட்டார் பைக் பறிமுதல்
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் பைக் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் பைக் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை நடமாட்டத்தை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோவில்பட்டி மேற்கு போலீசார் நான்கு வழி சாலை ஆவநத்தம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 150 கிராம் கஞ்சா இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பிடிபட்ட 3பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த செண்பகராஜ் மகன் மருதுபாண்டி (29), ஓட்டப்பிடாரம் மேல முடிமண் கணேசன் மகன் இசக்கி சங்கர் (20), பசுவந்தனை கீழமங்கலம் முத்துப்பாண்டி மகன் முத்துராஜ் (24) என்பதும், அவர்கள் 3 பேரும் கஞ்சா விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்கள் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தார்.