குமரி : கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

1.900 கிலோ பறிமுதல்;

Update: 2025-02-23 12:00 GMT
கன்னியாகுமரி  மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின்  கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.       அதன் தொடர்ச்சியாக நேசமணிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட   பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளங்கடை பகுதி சேர்ந்த கபீர் என்பவரது மகன் ஷாஜி(32), வடசேரி பகுதியைச் சேர்ந்த பாலன் என்பது மகன் சாம் பிரின்ஸ் (34) மற்றும் காட்டாத்துறை மயிலேறும் பெருமாள் என்பவரது மகன் ராஜேஷ் குமார் (34)  ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து   1.900 கிலோ கிராம்  எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை   பறிமுதல் செய்யப்பட்டது.        மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களில் மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நடவடிக்கையானது மேலும் தீவிர படுத்தப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

Similar News