பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு 3 பேர் மீது வழக்கு

குளச்சல்;

Update: 2025-02-23 12:42 GMT
குமரி மாவட்டம் வாணியக்குடி வியாகப்பர் தெருவை சேர்ந்தவர் ஜான்சன் மனைவி அனிதா (38). இவரும் சமாதானபுரம் பகுதியை சேர்ந்த புரூஸ்லீன் வினிஷ் (28) என்பவரும் இணைந்து வள்ளம் வைத்து கடலில் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் பங்கு தொகையை புரூஸ்லின்  சரியாக அனிதாவுக்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.         இந்த நிலையில் நேற்று அனிதா வியாகப்பர் கடற்கரை பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த புரூஸ்லின் வினிஷ் மற்றும் ஜெய்சன் (28) ஆகிய யோர் சேர்ந்த அனிதாவை தாக்கி உள்ளார்கள். இதில் காயமடைந்த அனிதா குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.        இது குறித்து அனிதா, புரூஸ்லின்  ஆகியோர் தனித்தனியே குளச்சல் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இருதரப்பிலும் மூன்று பேர் மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News