சட்டக் கல்லூரி மாணவருக்கு வெட்டு 3 பேர் மீது வழக்கு

நாகர்கோவில்;

Update: 2025-02-24 04:11 GMT
குமரி மாவட்டம் மேல சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் விஜய் (26) இவர் கேரள மாநிலம் பாறசாலையில் உள்ள ஒரு சட்ட கல்லூரியில் எல்எல்பி  படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரபிஸ் ( 24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.      இந்த நிலையில் நேற்று விஜய்  தனது நண்பருடன் அங்குள்ள பள்ளிக்கூடம் நின்று கொண்டிருந்தார். அப்போது ரபிஷ் உட்பட 3 பேர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து விஜயிடம் தகராறு செய்து, அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.      இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விஜய் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ரபிஷ் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News