கன்னியாகுமாரி விவேகானந்தர் கேந்திரத்தில் தேசிய அளவிலான மூன்று நாள் யோகா மாநாடு நாளை தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 700 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதற்காக இன்று மாலை அவர் கார் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். இங்குள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலில் தங்குகிறார். நாளை மாநாட்டை தொடங்கி வைத்த பின்னர் மாலை அவர் திருவனந்தபுரம் புறப்படுகிறார். ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.