கன்னியாகுமரி அருகே லீபுரம் பகுதியில் பாதி எரிந்த நிலையில் வாலிபர் ஒருவர் கருகிய நிலையில் பிணணமாக கிடந்தார். இது தொடர்பாக கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்ட் மகேஷ் குமார் தலைமையில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தவர் சிவகாசி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஹரிஹரசுதன் (26) என தெரியவந்துள்ளது. இவர் போக்சோ வழக்கு சம்மந்தமாக கடந்த 11ஆம் தேதி நாகர்கோவில் கோர்ட்டுக்கு வந்ததும், அப்போது நண்பர்களுடன் 13-ம் தேதி மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டு, பின்னர் தீவைத்து எரிக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. கன்னியாகுமரி, வட்டக் கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன், பெர்லின், ராபர்ட் சிங் ஆகிய மூன்று பேர் சேர்ந்து அவரை கொலை செய்ய செய்தது தெரிய வந்தது. மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது. பின்னர் போலீசார் 3 பேரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.