சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்குஅப்பகுதியில் சோதனை செய்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்,23; கதிர்,24; அன்பரசன்,28; ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் மூன்று பேரையும் பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 45 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.