கஞ்சா வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை.
மதுரையில் கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
மதுரை நகர் திலகர்திடல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2024 ம் ஆண்டு தொடரப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கில் (260/24), வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சுப்பராயலு மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் மூன்று வருட சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 15,000 அபராதமும், விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத்தந்த காவல்துறையினரை மாநகர காவல் சார்பாக, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் தனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.