தென்காசியில் புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த 3 நபர்கள் கைது
புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த 3 நபர்கள் கைது;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்து இங்கு விற்பனைக்காக போலி பதிவெண் கொண்ட வாகனத்தில் கடத்தி கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கர்நாடகா மாநிலம் சரஸ்வதி நகர் தர்மா ராம் என்பவரின் மகன் ஆத்மா ராம் 26, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஓமா ராம் என்பவரின் மகன் ஜெகதீஷ் 21, தெற்கு பூலாங்குளம் குத்தாலிங்கம் என்பவர் மகன் முருகன் 35 மற்றும் ரெட்டியார்பட்டி வைத்திலிங்கம் என்பவரின் மகன் பெருமாள் 51 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, ஆத்மா ராம் 27, ஜெகதீஷ் 21 மற்றும் பெருமாள் 51 ஆகிய மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவர்களிடமிருந்து காரில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 3,87,504 மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.