ரூ. 3 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது.
மதுரை அவனியாபுரம் பகுதியில் ரூபாய் 3000 லஞ்சம் பெற்ற சர்வேயர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.;
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் இவருக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா வாங்குவது தொடர்பாக மனு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து சர்வேயர் ராஜசேகர் இடத்திற்கு பட்டா வழங்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் பால முருகன் புகார் கூறியதையடுத்து ராஜசேகரிடம் ரூபாய் 3000 லஞ்சம் வழங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். அதனைத் தொடர்ந்து சர்வேயர் ராஜசேகரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து அவரை விசாரணை செய்து வருகின்றனர்