மளிகை கடையில் குட்கா விற்பனை- 3 பேர் கைது!

துத்திப்பட்டு பகுதியில் உள்ள மளிகை கடையில், தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.;

Update: 2025-08-11 07:51 GMT
வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு பகுதியில் உள்ள மளிகை கடையில், தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, குட்கா பொருட்களை விநியோகம் செய்த ஹனான் பாஷா (32), இர்பான் ஷெரிப் (38), ஷபி (37) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், 10 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News