நாய்களை வைத்து வனவிலங்குளை வேட்டையாடி, கூறுபோட்டு கறி விற்ற 3 பேர் கைது! இறந்த நாய்கறியை மான்கறி என விற்றது விசாரணையில் அம்பலம்

வரும் காலங்களில் இதுபோன்ற வனக்குற்ற வழக்கு மற்றும் வனஉயிரினக் குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். வன விலங்குகளைவேட்டையாடுவதை போன்றே விலைக்கு வாங்கி சமைத்து உண்பதும் வன விலங்குகளை உயிரின இறைச்சிகளைவனஉயிரினச்சட்டத்தின் படி தண்டனைகுரிய குற்றமாகும்;

Update: 2025-09-03 16:40 GMT
பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் சுதாகர் தலைமையில் வனவர்கள் பிரதிப்குமார், அஜித்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் அன்பரசு, தஸ்லிமா பஸானா, ரோஜா, வனக்காலவர் சிவரஞ்சனி ஆகியோர் அடங்கிய குழுவினர் அரசலூர், ஈச்சங்காடு,பகுதியில் உள்ள செல்வராஜ் மகன் அலெக்ஸாண்டர் என்பவரின் காட்டுக் கொட்டகையில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அலெக்ஸாண்டர், மற்றும் குமார் மகன் அலெக்ஸாண்டர் தனசிங், ஜெயசீலன் மகன் ஜான் ஜோசப் ஆகிய மூவரும் புலியூர் Extn II காப்புக்காட்டு ஒட்டிய பட்டா நிலங்களில் 2 நாய்கள் மூலமாக வேட்டையாடிய 2 பெண் புள்ளி மான் மற்றும் ஒரு காட்டுப்பன்றியை வெட்டி கூறு போட்டு கறியைவிற்பனைக்காக தயாராக வைத்திருந்தனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த வனத்துறையினர் அவர்களை கைது செய்து வேப்பந்தட்டை வனச்சரக அலுவலகத்தில் அழைத்து வந்து வனஉயிரின குற்ற வழக்கு (WLOR.NO.03/2025) செய்து மூவருக்கும் தலாதலா .1,50,000/-ரூ.4,50,000/- இணக்க கட்டணமாக வசூல் செய்து, அதனை அரசு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. வனத்துறையினர் நடத்திய விசாரணையில், குற்றவாளிகளில் ஒருவர் மான்கறி என்ற பெயரில் சாலையில் அடிப்பட்டு கிடக்கும் நாய்கள்மற்றும் நோய்வாய்பட்டு இறந்த ஆடுகளின் மாமிசங்களை விற்பனை செய்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, பொதுமக்கள் இதுபோன்ற ஏமாற்றுக்காரர்களை நம்ப வேண்டாம் எனவும், இறைச்சி கடைகளை அனுகி ஆரோக்கியமான இறைச்சிகளை உண்டு நோய் தொற்றுகளுக்குஆளாகாமல் இருக்கஅறிவுறுத்தப்படுகிறார்கள். வனத்துறை அறிவிப்பு: வரும் காலங்களில் இதுபோன்ற வனக்குற்ற வழக்கு மற்றும் வனஉயிரினக் குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். வன விலங்குகளைவேட்டையாடுவதை போன்றே விலைக்கு வாங்கி சமைத்து உண்பதும் வன விலங்குகளை உயிரின இறைச்சிகளை வன உயிரினச்சட்டத்தின் படி தண்டனைகுரிய குற்றமாகும். இதுபோன்ற வன உயிரினங்கள் வேட்டை /விற்பனை குறித்த தகவல்கள் கிடைப் பெற்றால் அருகில் உள்ள வனச்சரகஅலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News