கடையநல்லூரில் தெருநாய்கள் கடித்ததில் 3 பேர் படுகாயம்
தெருநாய்கள் கடித்ததில் 3 பேர் படுகாயம்;
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தெரு நாய்கள் தாக்கியதில் மூவர் படுகாயம் அடைந்தனர். முதுசாமி (75), முருகன் (47) ஆகியோரை நாய்கள் கடித்து குதறின. இதனால் பைரோஸ் பேகம் (60) என்ற பெண்ணுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே காயமடைந்தோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பைரோஸ் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து கடையநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பார்வையிட்டு அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.