தூத்துக்குடியில் 3 இடங்களில் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தூத்துக்குடியில் 3 இடங்களில் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம்;

Update: 2025-09-27 08:20 GMT
தூத்துக்குடி மாநகராட்சியில் ஆரம்ப காலத்தில் நகராட்சியாக இருந்தபோது பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்து வந்தது இந்த நிலையில் தொடர்ந்து இது தொடர்பாக மாநகராட்சி க்கு புகார் மேல் புகார் சென்றது எடுத்து மாநகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆங்காங்கே அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வி.இ.ரோடு ரத்னா காலனியில் இருந்து சண்முகபுரம் பகுதிக்கு செல்லும் மூன்று இடங்களில் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக வந்த புகாரின் பேரில் மேயர் ஜெகன் பெரியசாமி, அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சி நகரஅமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி முனீர் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் சென்று ரத்னா காலனியில் இருந்து சண்முகபுரம் 1வது தெரு பகுதிக்கு செல்லும் சாலை, சண்முகபுரம் பகுதிக்கு செல்லும் மற்றொரு சாலை, வி.இ. ரோட்டில் இருந்து சண்முகபுரத்துக்கு செல்லும் மற்றொரு பாதை என ஒரே நாளில் சண்முகபுரம் பகுதிக்கு செல்லும் மூன்று ஆக்கிரமிப்பு வழித்தட சுவர்களை ஆகிய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். 30 வருடத்திற்கு மேலாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய மேயருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Similar News