ராசிபுரம் அருகே கட்டிப்பாளையம் ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண நிதி 3 லட்சம்: அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார் வழங்கினர்.

ராசிபுரம் அருகே கட்டிப்பாளையம் ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசின் நிவாரண நிதி 3 லட்சம்: அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார் வழங்கினர்.;

Update: 2025-11-01 16:00 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், பொன்பரப்பிப்பட்டி கிராமம், பெருமாள் கோவில்காடு என்ற பகுதியில் வசிக்கும் முருகேசன் மகன் பழனிசாமி, 33. கடந்த மாதம் அக் 26-ம் தேதி காலை சுமார் 9 மணி அளவில் திருச்செங்கோடு வட்டம் கட்டிபாளையம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, ரூ. 3 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி, ஆகியோர் பொன்பரப்பிப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று பழனிசாமியின் குடும்பத்தினரிடம் ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கி, ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய ஆத்மா குழு தலைவர் ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.எம்.துரைசாமி, தாசில்தார் சசிகுமார், ஆர்.ஐ.,கார்த்திகேயன், வி.ஏ.ஒ.,ராஜலட்சுமி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். குடும்பத்திற்கு அரசின் நிவாரண நிதி 3 லட்சம்: அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் வழங்கி ரூ. 3 லட்சத்துக்கான காசோலை வழங்கி ஆறுதல் கூறினர்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், பொன்பரப்பிப்பட்டி கிராமம், பெருமாள் கோவில்காடு என்ற பகுதியில் வசிக்கும் முருகேசன் மகன் பழனிசாமி, 33. கடந்த மாதம் அக் 26-ம் தேதி காலை சுமார் 9 மணி அளவில் திருச்செங்கோடு வட்டம் கட்டிபாளையம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, ரூ. 3 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டார். இந்நிலையில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி, ஆகியோர் பொன்பரப்பிப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று பழனிசாமியின் குடும்பத்தினரிடம் ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கி, ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய ஆத்மா குழு தலைவர் ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.எம்.துரைசாமி, தாசில்தார் சசிகுமார், ஆர்.ஐ.,கார்த்திகேயன், வி.ஏ.ஒ.,ராஜலட்சுமி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Similar News