ராசிபுரத்தில் கத்தியால் பொதுமக்களை தாக்கிய 3 இளைஞர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது...
ராசிபுரத்தில் கத்தியால் பொதுமக்களை தாக்கிய 3 இளைஞர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை அருகே கடந்த 26.10.25 மதுபான கடை மற்றும் சாலைகளில் நடந்து சென்ற பொதுமக்கள் என பலரையும் 3 இளைஞர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் பட்டணம் சாலை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் பிரதீப்(21) தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் நிலையில் ராசிபுரம் உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் என்பவரிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் வழங்கிய புகாரில் 3 இளைஞர்கள் மீது வழக்கு தொடர்ந்து இளைஞர்களை கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 3 இளைஞர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவ வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும்,தற்போது பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை தாக்கிய சம்பவத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றும் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி ஆகியோர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் இளைஞர்களை கைது செய்ய பரிந்துரை செய்தனர். அதன் பெயரில் ராசிபுரத்தை சேர்ந்த சிராஜுதீன் என்பவரது மகன் ரியாசுதீன்(24)மற்றும் அவரது தம்பி அஜிபுதீன்(23) மற்றும் வி.நகர் பகுதியை சேர்ந்த ராஜா பாய் என்பவரது மகன் பாபு(23) ஆகிய மூன்று இளைஞர்கள் மீதும் குண்டாஸ் தடுப்பு சட்டமானது பாய்ந்தது. குண்டாஸ் சட்டம் பாய்ந்த நிலையில் ராசிபுரம் காவல்துறையினர் சேலம் மத்திய சிறையில் அதற்கான நகலை வழங்கி சிறையில் அடைத்தனர்...