ராசிபுரம் அடுத்த அலவாய்மலை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத 3வது திங்கள்கிழமை திருவிழா...
ராசிபுரம் அடுத்த அலவாய்மலை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத 3வது திங்கள்கிழமை திருவிழா...;
ராசிபுரம் அடுத்த அலவாய்மலை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத 3வது திங்கள்கிழமை திருவிழா... 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், 1500க்கும் மேற்பட்ட படிகட்டுகளை கடந்து சுவாமி தரிசனம்.... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அலவாய்மலை பகுதியில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500, அடி உயரத்தில், 1500 படிக்கட்டுகளை ஏறி சென்று பாலமுருகப் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும். இங்கு வருடம் தோறும் கார்த்திகை மாதம் வரும் அனைத்து திங்கள் கிழமைகளிலும் திருவிழாவானது நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, கார்த்திகை மாதம் 3வது வாரத்தில் விழா வெகுவிமார்சியாக நடந்து வருகிறது.3வது திங்கள்கிழமையான இன்று ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.இதில் கலந்துகொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.கொட்டும் மழையிலும் முருகப்பெருமானை தரிசனம் செய்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது... இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெரியோர்கள் கூறுகையில், சுமார் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த கோவில் அலவாய்மலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும்.இக்கோவிலிற்கு 1,500க்கும் மேற்பட்ட கருங்கற்களால் ஆன படிக்கட்டுகளை கொண்டே நடந்தே செல்ல வேண்டும். அருணகிரிநாதர் பாடப்பெற்ற தலம் இது. இந்த மலையை சுற்றிலும் 18 சித்தர் கோவில்கள் உள்ளன. குறிப்பாக மலையில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அருகேயுள்ள சுனையில் வரும் நீரை அருந்தினால், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பதே ஐதிகமாக உள்ளது என்றனர்...