கோவையில் 3 நாட்கள் கஞ்சா வேட்டை – 36 பேர் கைது, 10.150 கிலோ கஞ்சா பறிமுதல்!
கோவை மாவட்டத்தில் Operation - Drug Free என்ற பெயரில் ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் காவல் துறை சார்பில் அதிரடி கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.;
கோவை மாவட்டத்தில் Operation - Drug Free என்ற பெயரில் ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் காவல் துறை சார்பில் அதிரடி கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், 89 தனிப்படைகளில் 300 போலீசார் ஈடுபட்ட இந்த ஆப்பரேஷனில், கடந்த காலத்தில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 927 நபர்கள் அடங்கிய பட்டியலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 761 நபர்கள் தேடப்பட்டு, 461 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 36 நபர்கள் கஞ்சா வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் 10 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, விநியோகத் தொடரைப் பற்றியும், பின்னணிக் குற்றவாளிகளைப் பற்றியும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. போதைப் பொருள் வழக்குகளில் ஈடுபடுபவர்கள் கடுமையாகக் கண்காணிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு காவல் துறைக்கு தகவலளிக்க வேண்டும் என்றும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.