கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் கைது

நத்தம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேர் கைது;

Update: 2025-06-22 11:00 GMT
திண்டுக்கல், நத்தம் சமுத்திராபட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன்(47) இவர் சிறுகுடி செல்லும் சாலை ஊரணிக்கரை பகுதி வீட்டில் தாய் சொர்ணத்துடன் 70, வசித்து வந்தநிலையில் ஜூன் 16- இரவு வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் அழகப்பனின் கழுத்தில் கத்தியை வைத்து பீரோவை திறக்க கூறி அதில் நகை, பணம் இல்லாத ஆத்திரத்தில் கத்தியால் அவரின் கழுத்து, கை,கால்களில் சராமரியாக குத்திவிட்டு தப்பினர். இது குறித்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக மேலுாரை சேர்ந்த பிரபாகரன்(29), சாந்தகுமார்(28), முத்துவெங்கடாஜலபதி (29), ஆகியோரை கைது செய்த நிலையில் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிங்கம்புணரியில் பாபு(41), மேலூரை சேர்ந்த பாக்கியராஜ்(39), திருப்பத்தூரை சேர்ந்த மணிமொழி(45) நத்தத்தை சேர்ந்த பிரபாகரன்(60) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News